search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரட்டை கொலை"

    • பகவல் சிங்கை எப்படியும் செல்வந்தர் ஆக்கி விடுவேன் என்று முகமது ஷபி அவரிடம் உறுதியாக கூறியுள்ளார்.
    • லைலாவுக்கு கணவரை விட மந்திரவாதி முகமது ஷபியின் நெருக்கம் பிடித்து போனது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் 2 பெண்களை நரபலி கொடுத்த சம்பத்தில் போலீசார் மந்திரவாதி முகமது ஷபி, பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரை கைது செய்துள்ளனர்.

    2 பெண்களை கொலை செய்த மந்திரவாதி முகமது ஷபி வேறு யாரையும் இதற்கு முன்பு கொலை செய்துள்ளாரா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் முகமது ஷபியும், லைலாவும் சேர்ந்து லைலாவின் கணவர் பகவல் சிங்கை கொலை செய்ய ரகசிய திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் இன்று கூறியதாவது:-

    பகவல் சிங்கை எப்படியும் செல்வந்தர் ஆக்கி விடுவேன் என்று முகமது ஷபி அவரிடம் உறுதியாக கூறியுள்ளார். இதனை பகவல் சிங் முழுமையாக நம்பி, முகமது ஷபி கூறிய அனைத்தையும் செய்ய தயாராகி உள்ளார்.

    அதன்படி பகவல் சிங்கின் மனைவி லைலாவுடன் கணவர் கண்முன்பே முகமது ஷபி உல்லாசமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் லைலாவுக்கு கணவரை விட மந்திரவாதி முகமது ஷபியின் நெருக்கம் பிடித்து போனது.

    இதையடுத்து அவர்கள் இருவரும் பகவல் சிங்கை கொல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்கான நேரத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்தபோதுதான் அவர்கள் நரபலி வழக்கில் சிக்கி கொண்டனர். இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர். முகமது ஷபி மற்றும் லைலாவை காவலில் எடுத்து விசாரிக்கும்போது இது தொடர்பாக மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    • முகமது ஷபி பேஸ்புக் மூலம் பலரை நண்பர்களாக்கி உள்ளார்.
    • பேஸ்புக்கில் பூக்களின் படத்தை வைத்து இதுபோல மகிழ்ச்சியாக இருக்கவும், செல்வம் கொழிக்கவும் பூஜைகள் செய்து தருவேன் என பதிவிட்டு உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக 2 பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நரபலி கொடுக்கப்பட்ட பெண்களில் ஒருவர் தமிழ்நாட்டின் தர்மபுரியை சேர்ந்த பத்மா (வயது 51). இன்னொருவர் கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி (50).

    இவர்கள் இருவரையும் நரபலி கொடுத்ததாக முகமது ஷபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பத்மா காணாமல் போன பகுதியில் இருந்து அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆன பகுதி வரையிலான கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததின் மூலமே முகமது ஷபி மற்றும் பகவல் சிங், லைலா ஆகியோர் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

    கைதானவர்கள் பற்றி போலீசார் தெரிவித்த தகவல்கள் நெஞ்சை பதறவைப்பதாக இருந்தது. அதன்விபரம் வருமாறு:-

    நரபலி கொடுத்த 2 பெண்களையும் முகமது ஷபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்து உள்ளனர். அங்கு தோண்டி பார்த்த போது பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக இருந்தது. இதுபற்றி கேட்டபோது பெண்களின் உடலை 56 துண்டுகளாக வெட்டி சமைத்து சாப்பிட்டதாக கூறினர்.

    மேலும் நரபலி கொடுக்கும் முன்பு பெண்களை வைத்து நிர்வாண பூஜை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இது எப்படி சாத்தியமானது என்று கேட்டபோது, நரபலிக்கு அழைத்து வந்த பெண்களை ஆபாச சினிமாவில் நடித்தால் அதிக பணம் கிடைக்கும் என்று கூறி அழைத்து வந்துள்ளனர்.

    இதனால் அவர்களை நிர்வாணமாக இருக்க வேண்டும் என்றதும் அவர்களும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் நிர்வாணமாக படுத்துள்ளனர். அதன்பின்பு அவர்களின் கை, கால்களை கட்டி நிர்வாண பூஜை நடத்தி உள்ளனர்.

    இந்த பூஜையை மந்திரவாதி முகமது ஷபி நடத்தி உள்ளார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியே இவர்தான். முகமது ஷபி, பெண்களை வசியம் செய்வதில் கில்லாடி. இவர் மீது பல பாலியல் வழக்குகள் உள்ளது.

    அதில் 70 வயது மூதாட்டி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கும் உண்டு. அந்த வழக்கில் இருந்து இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளிவந்துள்ளார். பெண்களை அழைத்து வந்து அவர்களை சித்ரவதை செய்வதில் முகமது ஷபி ஆர்வம் கொண்டவர்.

    இவர் மீதான வழக்குகளை ஆய்வு செய்த போது இவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் அனைவரும் இது போன்ற சித்ரவதைக்கு ஆளாகி உள்ளனர். அதில் பெண்களின் மர்ம உறுப்பை அறுப்பது, மார்பகங்களை வெட்டி எடுப்பது போன்ற கொடுமைகளை செய்துள்ளார்.

    அதுபோல பத்மா, ரோஸ்லி இருவரின் மர்ம உறுப்புகளை சேதப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். மேலும் முகமது ஷபி இதுபோல வேறு பெண்களை கடத்தி நரபலி கொடுத்துள்ளாரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம்.

    தற்போது கைதான 3 பேரும் 14 நாள் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம்.

    அப்போது இந்த வழக்கு தொடர்பான மேலும் பல உண்மைகள் தெரியவரும் என நம்புகிறோம்,

    முகமது ஷபி பேஸ்புக் மூலம் பலரை நண்பர்களாக்கி உள்ளார். பேஸ்புக்கில் பூக்களின் படத்தை வைத்து இதுபோல மகிழ்ச்சியாக இருக்கவும், செல்வம் கொழிக்கவும் பூஜைகள் செய்து தருவேன் என பதிவிட்டு உள்ளார். நரபலியில் ஈடுபட்டதாக கைதான பகவல் சிங் அவரது மனைவி லைலா இருவரும் பேஸ்புக் மூலமாகவே முகமது ஷபியுடன் பழக்கம் ஆகி உள்ளனர். எனவே முகமது ஷபியின் பேஸ்புக் தகவல்கள் அனைத்தையும் கைப்பற்றி அதனை ஆய்வு செய்ய உள்ளோம்.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    கொச்சி போலீஸ் கமிஷனர் நாகராஜ் உள்பட போலீஸ் உயர்அதிகாரிகள் இது தொடர்பான விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதனிடையே 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

    • 2 இரட்டை கொலை விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது.
    • இந்த 2 சம்பவங்களிலும் குற்றவாளிகளை பிடிக்க 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வைத்தியநாத புரத்தில் கடந்த 16-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த தனியார் நிறுவன மேலாளர் ராஜகோபாலன். அவரது மனைவி குருபாக்கியம் ஆகியோர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.

    வீட்டில் இருந்த பணம், ஆவணம் திருடு போனதாக கூறப்பட்டது. 18-ந் தேதி அருப்புக்கோட்டை எம்.டி.ஆர்.நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கரபாண்டியன், அவரது மனைவி ஜோதிமணி ஆகியோரும் கொலை செய்யப்பட்டார்கள். இந்த 2 இரட்டை கொலைகளும் பணம்-நகை ஆதாயத்திற்காக நடந்தது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    இந்த 2 சம்பவங்களிலும் குற்றவாளிகளை பிடிக்க 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 20 நாட்களுக்கு மேலாகியும் இரட்டை கொலைகளுக்கு இதுவரை துப்புதுலங்கவில்லை.

    விருதுநகர் மாவட்டத்தில் நடந்த மர்மமான கொலைகள் விசாரணை அமைப்புகள் மாற்றப்பட்ட பின்பு தான் துப்புதுலங்கப்பட்டுள்ளது.

    கடந்த 2005-ம் ஆண்டு வருமான வரித்துறை உதவி ஆணையர் எபினேசர் பால், அவரது மனைவி லீலாபால் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட பின்பு தான் துப்புதுலங்கப்பட்டது.

    அதே ஆண்டில் விருதுநகரை சேர்ந்த தொழிலதிபர் மனைவி கனகலட்சுமி, மூதாட்டி கஸ்தூரி ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டனர். 2010-ம் ஆண்டு நகராட்சி கவுன்சிலர் ஆரிப்அலி மகன் அகமது ரைஸ் விருதுநகர்- சிவகாசி ரோட்டில் படுகொலை செய்யப்பட்டார்.இந்த வழக்குகளில் இதுவரை துப்புதுலங்கப்படவில்லை.

    எனவே கடந்த மாதம் நடந்த 2 இரட்டை கொலைகளில் தொடர்புடையவர்களை கைது செய்ய வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. உள்ளிட்ட விசாரணை அமைப்புகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இந்த இரட்டை கொலை சம்பந்தமாக தென்மண்டல ஐ.ஜி.யின் நேரடி கண்காணிப்பில் விசாரணையை தீவிரப்படுத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    • நள்ளிரவு நேரத்தில் இந்த கொலை நடந்துள்ளதால் அருகில் வசிப்பவர்களுக்கு தெரியவில்லை.
    • கொள்ளையர்கள் கொலையில் துப்புதுலங்காமல் இருப்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடிகளை தூவி உள்ளனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது 75). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி குருபாக்கியம்(68). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் கோவை மற்றும் சென்னையில் உள்ளனர்.

    இந்த நிலையில் ராஜகோபால் வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் லட்சக்கணக்கில் பலருக்கு கடன் கொடுத்து வட்டி வாங்கி வந்துள்ளார். இது தொடர்பாக சிலரிடம் அவருக்கு முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    ராஜகோபாலும் அவரது மனைவியும் நேற்று வீட்டிலிருந்து வெளியில் வரவில்லை. அவர்களின் வீட்டு கதவு திறந்து கிடந்தது. அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையில் ராஜகோபாலும், குருபாக்கியமும் பிணமாக கிடந்தனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடலையும் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கணவன்-மனைவி இருவரது கழுத்திலும் காயம் உள்ளது. எனவே அவர்களை மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். நள்ளிரவு நேரத்தில் இந்த கொலை நடந்துள்ளதால் அருகில் வசிப்பவர்களுக்கு தெரியவில்லை. மேலும் கொள்ளையர்கள் கொலையில் துப்புதுலங்காமல் இருப்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடிகளை தூவி உள்ளனர்.

    இந்த கொலை பற்றி தகவல் கிடைத்ததும் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சபரிநாதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு துப்புதுலக்கப்பட்டது.

    மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள கண்ணகாணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் கொலையாளிகள் உருவம் பதிவாகி இருந்தால் அதன் மூலம் குற்றவாளிகளை பிடித்து விடலாம் என்று போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    பணப் பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கணவன்-மனைவியை மர்ம நபர்கள் கொலை செய்தார்களா? அல்லது ராஜகோபால் வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததால் அவரிடம் நகை-பணம் அதிகமாக இருக்கும் அதை கொள்ளையடிக்கலாம் என்ற நோக்கத்தால் இந்த கொலைகள் நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த இரட்டை கொலை சம்பவம் ராஜபாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பெண்ணிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட விரோதத்தில் கொன்றது அம்பலம்
    • கொலையாளி பயன்படுத்திய மங்கி குல்லாவை கைப்பற்றி விசாரணை

    நாகர்கோவில்:

    வெள்ளிச்சந்தை அருகே முட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ் இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பவுலின்மேரி (வயது 48).

    இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். 2-வது மகன் சென்னையில் படித்து வருகிறார். இதனால் முட்டத்தில் உள்ள வீட்டில் பவுலின்மேரியும், அவரது தாயார் தெரசம்மாளும் வசித்து வந்தனர்.

    கடந்த 6-ந்தேதி பவுலின் மேரி, தெரசம்மாள் இரு வரும் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். அவர்கள் அணிந்திருந்த 15 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து  வெள்ளிச்சந்தை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப் படை போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். கொலையாளி பயன்படுத்திய மங்கி குல்லாவை கைப் பற்றி விசாரணை மேற் கொண்டனர். பல்வேறு கோணங்களில் விசா ரணை மேற்கொண்ட போலீசார் இரட்டைக் கொலை தொடர்பாக கடியப்பட்டணத்தைச் சேர்ந்த அமலசுமன் (35) என்பவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல் வெளி யாகி உள்ளது. போலீசாரிடம் அமலசுமன் கூறியதாவது:-

    கொலை செய்யப்பட்ட பவுலின்மேரி தையல் வகுப்பு நடத்தி வந்தார். அந்த தையல் வகுப்பிற்கு வந்த பெண்ணி டம் நான் தகராறு செய்தேன். இதை அந்த பெண் பவுலின் மேரியிடம் கூறினார்.

    இதை பவுலின்மேரி என்னிடம் தட்டிக்கேட்டார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்ப வத்தன்று பவுலின் மேரி வீட்டிற்கு சென்றேன். வீட்டில் இருந்த அவர், என்னிடம் தகராறில் ஈடுபட்டதால் தீர்த்துக் கட்டினேன். இதை வீட்டில் இருந்த அவரது தாயார் பார்த்தார். இதனால் அவரை அயன்பாக்சால் தாக்கினேன்.

    பின்னர் அவர்கள் அணிந்திருந்த நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டேன். கொள்ளையடித்த நகையை அந்த பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் அடகு வைத்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து போலீசார் அமலசுமன் அடகு வைத்த நகையை மீட்டனர்.

    கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். தையல் வகுப்பிற்கு வந்த பெண்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெண் ஒருவர் தன்னிடம் அமலசுமன் தகராறில் ஈடுபட்ட தாகவும், அதை பவுலின்மேரியிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.

    தகராறில் ஈடுபட்ட அமலசுமன் போட்டோவை செல்போனில் எடுத்து இருப்பதாக தெரிவித்தார். அப்போது போலீசார் அந்த புகைப்படத்தை பார்த்தனர். அதில் பவுலின்மேரி வீட்டில் இருந்து முக்கிய தடயமாக சிக்கிய மங்கி குல்லா அமலசுமன் வைத்தி ருந்தது தெரிய வந்தது. இதனால் அமல சுமன்தான் கொலையாளி என்பதை போலீசார் முடிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    போலீசார் தேடுவதை அறிந்த அமல சுமன் தலைமறைவாகி இருந்தார். எனவே அவர்தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டுமென்று போலீசார் உறுதி செய்தனர். இந்த நிலையில் அமலசுமனை கைது செய்து விசாரித்தபோது கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

    • கொலைக்கான காரணம் குறித்து 3 கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை
    • தகராறில் கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளை முயற்சியில் கொலை நடந்ததா? என 3 கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    ராஜாக்கமங்கலம் அருகே முட்டம் தூய குழந்தை ஏசு தெருவை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். இவருடைய மனைவி பவுலின் மேரி (வயது 48). இவரது தாயார் திரேசம்மாள் (90). பவுலின் மேரியின் கணவர் ஆன்றோ சகாயராஜ். அவரது மூத்த மகன் ஆலன் (25) ஆகியோர் துபாயில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.

    பவுலின் மேரியின் 2-வது மகன் ஆரோன் (19) சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினியரிங் பயின்று வருகிறார். இந்த நிலையில் பவுலின் மேரி, அவரது தாயார் திரேஸ் அம்மாள் இருவரையும் அடித்துக் கொலை செய்து விட்டு அவர்கள் அணிந்திருந்த 15 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    கொலையாளிகளை பிடிக்க குளச்சல் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், வடசேரி இன்ஸ்பெ க்டர் திருமுருகன், கொல்ல ங்கோடு இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம்பெஞ்சமின் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்க ப்பட்டது. தனிப்படை போலீசார் கொலை நடந்த வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது வீட்டில் இருந்த சில முக்கிய தடயங்களை போலீசார் கைப்பற்றினார்கள்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்ட னர். வடமாநில வாலிப ர்கள் சிலரிடமும் விசா ரணை நடத்தப்பட்டது. இதற்கிைடயில் கொலை செய்யப்பட்ட பவுலின்மேரி, திரேசம்மாளின் உடல் பரிசோ தனை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது. பிரேத பரிசோதனையின் போது பவுலின்மேரி கையில் தலைமுடி சிக்கி இருந்தது தெரிய வந்தது. அது ஆணின் தலைமுடி என்று கூறப்படுகிறது. எனவே கொலையாளிகள் பவுலின்மேரியை தாக்கும் போது அவர், கடுமையாக போராடி இருப்பது தெரிய வந்துள்ளது.

    மேலும் கொலையாளிகள் வீட்டில் விட்டு சென்ற மப்ளரையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். மப்ளர் கைப்பற்றப்பட்டதால் கொலையாளிகள் பவுலின் மேரிக்கு தெரிந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலையாளிகள் முகம் தெரியாமல் இருக்க மப்ளரை பயன்படுத்தி இருக்கலாம் என்று தெரிகிறது.

    கொலை செய்யப்பட்ட பவுலின்மேரி வீட்டிற்கு செல்லும் வழியில் கஞ்சா அடித்துக்கொண்டு வாலிபர் கள் சிலர் கடந்த சில மாதங் களுக்கு முன்பு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக பவுலின் மேரி புகார் அளித்துள்ளார். இேதபோல் பவுலின்மேரி நடத்திவந்த தையல் பயிற்சி பள்ளிக்கு வந்த இளம்பெண் களை வாலிபர்கள் சிலர் கிண்டல் செய்துள்ளனர்.

    இது தொடர்பாகவும் போலீசில் புகார் செய்து ள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளை முயற்சியில் கொலை நடந்ததா? என 3 கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    கொலை செய்யப்பட்ட பவுலின்மேரி, திரேசம்மா ளின் உடல்கள் இன்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதை தொடர்ந்து மாலை பவுலின்மேரி, திரேசம்மாள் உடல் அடக்கம் செய்யப்படு கிறது.

    இதையடுத்து முட்டம் பகுதி மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    ×